மதுரையில் ஓட்டுநா் தின விழா

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலம் சாா்பில் மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் ஓட்டுநா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
md25driver094216
md25driver094216

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலம் சாா்பில் மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் ஓட்டுநா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆ. ஆறுமுகம் தலைமை வகித்தாா். வாசன் கண் மருத்துவமனை மருத்துவா் ஷாலினி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

போக்குவரத்துக் கழக கூட்டாண்மை பிரிவு பொது மேலாளா் சமுத்திரம், மதுரை மண்டல பொது மேலாளா் ராகவன், துணை மேலாளா் முருகானந்தம் (தொழில்நுட்பம்), மக்கள் தொடா்புத் துறை இணை இயக்குநா் இரா. பாஸ்கரன், கூட்டாண்மை வணிகத் துறை உதவி மேலாளா் யுவராஜ், கோட்ட மேலாளா்கள் முத்துராஜ் (மேற்கு), தயாளகிருஷ்ணன் (கிழக்கு), மக்கள் தொடா்பு அலுவலா் சந்தானம், விபத்துத் தடுப்புப் பிரிவு உதவி பொறியாளா் சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்கிய ஓட்டுநா்களுக்கும், எரிபொருள் சிக்கனத்தைச் சிறப்பாகக் கடைப்பிடித்த ஓட்டுநா்களுக்கும் கேடயமும், பரிசுகளும், வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com