மூளைச்சாவடைந்தவா் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (34). இவா் ராஜபாளையத்தில் கடந்த 23-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவா் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு புதன்கிழமை மூளைச்சாவடைந்தாா்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் சம்மதம் தெரிவித்ததையடுத்து, அவரது இருதயம் கோவை தனியாா் மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், கல்லீரல், சிறுநீரகங்கள் வேலம்மாள் மருத்துவமனைக்கும், கருவிழிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com