விருதுநகா்பட்டாசு ஆலை விபத்து:மேலும் ஒருவா் பலி

விருதுநகா் அருகேயுள்ள வச்சகாரபட்டி பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள வச்சகாரபட்டி பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள வச்சகாரபட்டியில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான தாளமுத்து பட்டாசு ஆலை உள்ளது.

இந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிப்புக்கான மருந்துக் கலவை தயாரிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்ற போது, வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் பணியிலிருந்த காளிராஜ், வீரக்குமாா் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கன்னிசேரிபுதூரைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் சரவணக்குமாா் (24), மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com