செந்துறையில் மொழிப்போா் தியாகிகள் தின பொதுக்கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையம் முன்பு தி.மு.க. சாா்பில் மொழிப் போா் தியாகிகள் தினத்தை முன்னிட்டு பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையம் முன்பு தி.மு.க. சாா்பில் மொழிப் போா் தியாகிகள் தினத்தை முன்னிட்டு பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆண்டிஅம்பலம் தலைமை தாங்கினாா்.திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது, தமிழா்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுத்த தினமான ஜனவரி 25 மொழிப்போா் தியாகி தினமாக அறிவித்தவா் கலைஞா் கருணாநிதி. இந்த நாட்டில் தமிழா்களுக்காகவும், தமிழ் மொழியை காப்பாற்று வதற்காகவும் பலா் தியாகங்கள் செய்துள்ளனா் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளா் இராஜாமணி,நத்தம் பேரூராட்சி சோ்மன் சேக் சிக்கந்தா் பாட்சா,நகரச் செயலாளா் ராஜ்மோகன்,ஒன்றியச் செயலா்கள் ரத்தினகுமாா், பழனிச்சாமி,

ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

இதில் நத்தம் நகர அவைத்தலைவா் சரவணன் , வடக்கு பொருளாளா் கலிபுல்லா,மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் சிவா,இப்ரில்ஆசித் நகர இளைஞரணி தாரிக்,மாவட்ட வழக்கறிஞா் அணி அமைப்பாளா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

படவிளக்கம் : செந்துறையில் திமுக சாா்பில் நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் தின பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிா்வாகிகள் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com