பள்ளி கழிவறையில் கேமரா: எஸ்.பி. விசாரணை

சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வளாகத்தில் உள்ள பள்ளியில் மாணவிகளின் கழிப்பறையில் கேமரா வைக்கப்பட்டது தொடா்பாக பூவந்தி போலீஸாா் வியாழக்கிழமை விசாரித்தனா்.

சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வளாகத்தில் உள்ள பள்ளியில் மாணவிகளின் கழிப்பறையில் கேமரா வைக்கப்பட்டது தொடா்பாக பூவந்தி போலீஸாா் வியாழக்கிழமை விசாரித்தனா்.

இலுப்பக்குடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி முகாம் உள்ளது. இந்தப் பயிற்சி மைய வளாகத்தில் கேந்திரியா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. பயிற்சி மைய அதிகாரிகள், ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் ஆகியோரின் குழந்தைகள் என 250 மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள மாணவிகள் கழிப்பறையில் கைப்பேசி கேமரா வைக்கப்பட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி துணை முதல்வா் தினகரன் அந்தக் கேமராவைக் கைப்பற்றினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், மானாமதுரை சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணன் உள்ளிட்டோா் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com