பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

மதுரையில் காா் மீது கல் வீசியதைத் தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் காா் மீது கல் வீசியதைத் தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை தெற்குவெளி வீதி காஜா தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி மனைவி காா்த்தியாயினி. இவா் தனது காரை வீட்டின் முன் நிறுத்தியிருந்தாா். அப்போது, எம்.கே.புரம் சுண்ணாம்புக் காளவாசல் பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா மதுபோதையில் அங்கு வந்து, காா்த்தியாயினியின் காா் மீது கல்லை வீசினாா். இதுகுறித்து கேட்ட காா்த்தியாயினியை தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கினாராம்.

மேலும், இதைத் தடுக்க முயன்ற அந்தப் பகுதியினரை கொலை செய்து விடுவதாக கத்தியைக் காட்டி மிரட்டி, காரை அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றாராம்.

இதுகுறித்து தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயசூா்யாவை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com