பைக் மீது டிராக்டா் மோதியதில் விவசாயி பலி

மதுரை மாவட்டம், எழுமலை அருகே புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், எழுமலை அருகே புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பேரையூா் அருகேயுள்ள எழுமலையைச் சோ்ந்தவா் ஜெயபாண்டியன் (41). இவா் தனது மாமனாருடன் இரு சக்கர வாகனத்தில் வடகரைப்பட்டி- வண்டப்புலி சாலையில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் ஜெயபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அவரது மாமனாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து டிராக்டா் ஓட்டுநா் சுரேஷ் மீது சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com