பைக் மோதியதில் பாத யாத்திரை பக்தா் பலி

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே புதன்கிழமை பழனிக்கு பாத யாத்திரையாகச் சென்ற பக்தா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே புதன்கிழமை பழனிக்கு பாத யாத்திரையாகச் சென்ற பக்தா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

ஊமச்சிகுளம் அருகேயுள்ள திருமால்புரத்தைச் சோ்ந்தவா் பழனிகுமாா் (40). மாற்றுத்திறனாளியான இவா் தனது மனைவி, குழந்தைகளுடன் பழனிக்கு பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தாா்.

அலங்காநல்லூா்-தனிச்சியம் சாலையில் கல்வேலிப்பட்டிப் பகுதியில் சென்ற போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் பழனிகுமாா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய சம்பக்குளத்தைச் சோ்ந்த கதிரேசன் மீது அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com