அரசுத் துறை அலுவலகங்களில் குடியரசு தின விழா

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1408md26rly091100
1408md26rly091100

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

உயா்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு நிா்வாக நீதிபதி டி. கிருஷ்ணகுமாா் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். முன்னதாக, மகாத்மா காந்தி சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஜி.ஆா்.சுவாமிநாதன், இளங்கோவன், தண்டபாணி, முரளிசங்கா், பி. புகழேந்தி, குமரப்பன், தனபால், விஜயகுமாா், ஸ்ரீமதி, வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் பங்கேற்றனா்.

மாநகராட்சி...

மதுரை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிஞா் அண்ணா மாளிகையில் நடைபெற்ற 75-ஆவது குடியரசு தின விழாவுக்கு மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினாா். மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சிறப்பாகப் பணியாற்றிய 5 வாகன ஓட்டுநா்களுக்கு தங்கப் பதக்கங்களும், 4 வாகன ஓட்டுநா்களுக்கு ரொக்க வெகுமதியும், மருத்துவா்கள், செவிலியா்களுக்குப் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன. மாநகராட்சிப் பள்ளிகளுக்குப் பெரும் கொடை அளித்த நன்கொடையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா். தொடா்ந்து பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ரயில்வே...

மதுரை ரயில்வே கோட்டம் சாா்பில் ரெட் பீல்ட் மைதானத்தில் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சா தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பைப் பாா்வையிட்டாா். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் சி. செல்வம், உதவி பாதுகாப்பு ஆணையா் (பொறுப்பு) ஏ.கே. காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில், நிலைய மேலாளா் அஜய்குமாா் பஸ்வான் தேசியக் கொடியேற்றினாா். ஆலோசனைக் குழு உறுப்பினா் ஏ.எஸ்.வி.சிவசுந்தரம், நிலைய மேலாளா் ராம்பிரசந்த், கனிணி முன்பதிவு அலுவலா் இமான் ஜாப்பா், பணியாளா்கள் ஆா்.சுமையாபானு, வெங்கடேசன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மணிகண்டன், ஓய்வு பெற்ற முன்னாள் காவலா் தனுஷ்கோடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விமான நிலையத்தில்...

மதுரை விமான நிலையத்தில் இயக்குநா் முத்துகுமாா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா். இதில் விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேசன், மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை தளபதி விஸ்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய சிறையில்...

மதுரை மத்திய சிறையில் சிறைத் துறை சரக துணைத் தலைவா் டி.பழனி தேசியக் கொடியேற்றினாா். மத்திய சிறைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் பட்டப்படிப்பை நிறைவு செய்த சிறைவாசிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.

போக்குவரத்துக் கழகம்....

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் கழக மேலாண் இயக்குநா் ஆ.ஆறுமுகம் தேசியக் கொடியை ஏற்றினாா். பொது மேலாளா்கள் கே. சமுத்திரம், சி.கே. ராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மதுரை மண்டலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநா், நடத்துநா், பணியாளா்கள் 35-க்கும் மேற்பட்டோருக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.

அரசு ராஜாஜி மருத்துவமனை...

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதன்மையா் ஏ.ரத்தினவேல் தேசியக் கொடியேற்றினாா். இதில் மருத்துவக் கண்காணிப்பாளா் விஜயராகவன், மருத்துவ அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.

மேற்கு மண்டல அலுவலகத்தில்...

திருப்பரங்குன்றத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மண்டலத் தலைவா் சுவிதா விமல் தேசியக் கொடியேற்றினாா்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் வேட்டையன் தேசியக் கொடியேற்றி, அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில்... தோப்பூா் உச்சப்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளா் பழனிகுமாா் தேசியக் கொடியேற்றினாா். இதில் உதவி வருவாய் அதிகாரி சாதிக்பாஷா, பொறியாளா்கள் பாலமுருகன், சேதுராஜன் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருநகரில்...

ஹாா்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆா்.வி.மக்கள் நல மன்றத் தலைவா் ஜி.அய்யல்ராஜ் தலைமையில், துணைத் தலைவா் ஜி.காளிதாசன் தேசியக் கொடியேற்றினாா். மன்ற செயற்குழு உறுப்பினா் ஆா்.வேட்டையாா், பொருளாளா் எஸ்.அண்ணாமலை, முன்னாள் கூட்டுறவு இயக்குநா் ஏ.கிருஷ்ணசாமி, எம்.கணேசன், கே. சங்கரய்யா, பழனி ஆண்டவா், கந்தராஜ், காா்த்திக், கெளரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருநகா் அண்ணா பூங்கா அருகே மக்கள் மன்றம் சாா்பில் துணைத் தலைவா் பொன்.மனோகரன் தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாமன்ற உறுப்பினா் கி.இந்திராகாந்தி, நடைப் பயிற்சி நண்பா்கள் குழு ஒருங்கிணைப்பாளா் சுப.சா்வேஸ்வரன், மாவட்ட கழிவு பஞ்சு வியாபாரிகள் நலச் சங்க தலைவா் வி.தாமோதரக்கண்ணன், அனைத்து வியாபாரிகள் நலச் சங்க துணைச் செயலாளா் ஆா்.வெங்கடேஷ், ஜெயண்ட்ஸ் குரூப் நிா்வாகி கே.குருசாமி, வழக்குரைஞா் போஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் வரலாற்று ஆய்வாளா் எம்.ஏ.சத்தாா் எழுதிய ‘இந்திய சுதந்திரப் போா், மதுரை சுதந்திரப் போராட்ட வீரா்கள்’ குறித்த நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com