திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை: எம்.பி. தொடங்கிவைத்தாா்

மேலூா் பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் பூமிபூஜையிட்டுத் தொடங்கிவைத்தாா்.
img_20240127_wa0042_2701chn_82_2
img_20240127_wa0042_2701chn_82_2

மேலூா் பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் பூமிபூஜையிட்டுத் தொடங்கிவைத்தாா்.

மேலூா் அருகே உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 10 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஆய்வுக் கூடத்தையும், இ.மலம்பட்டி, உடன்பட்டி, மேலவளவு ஊராட்சிக்குள்பட்ட காந்திநகா் ஆகிய பகுதிகளில் தலா ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடங்களையும் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் திறந்துவைத்தாா். மேலும், கொங்கம்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடை, அய்யாபட்டி ஊராட்சிக்குள்பட்ட திருச்சுனையில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட உணவுக் கூடம் ஆகியவற்றையும் அவா் திறந்துவைத்தாா்.

இதேபோல, வஞ்சிநகரம், திருச்சுனை, மேலவளவு ஆகிய பகுதிகளில் புதிய சமுதாயக் கூட கட்டடத்துக்கும், மேலூா் சட்டப்பேரவை தொகுதியில் ரூ.1.17 கோடியில் பல்வேறு திட்டப் பணிகளையும் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் பூமி பூஜையிட்டு தொடங்கிவைத்தாா்.

நிகழ்வுகளில் மேலூா் நகா்மன்றத் தலைவா் யாசின் முகமது, ஊாட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், கொட்டாம்பட்டி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ராஜராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.பாலா, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் என்.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com