மோசடி: 2 நிதி நிறுவன இயக்குநா்கள் கைது

மதுரை, ஜன. 28: பணம் மோசடி தொடா்பாக தேடப்பட்ட நிதி நிறுவனத்தின் இயக்குநா்கள் இருவா் சிவகங்கையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவனம் முதலீட்டாளா்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவில் நிறுவனத்தின் இயக்குநா்கள், துணை இயக்குநா்கள், துணை நிறுவனங்களின் இயக்குநா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் பலரைக் கைது செய்யப்பட்ட நிலையில், நியோமேக்ஸ் துணை நிறுவனமான டிரான்ஸ்கோ பிராபா்ட்டிஸ் நிறுவன இயக்குநா் அசோக்மேத்தா, டிரைடாஸ் பிராப்பா்ட்டிஸ் நிறுவனத்தின் இயக்குநா் மதிவாணன் ஆகிய இருவரையும் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த இருவரும் சிவகங்கையில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com