பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்கள் மாநாடு

4701md27meet104552
4701md27meet104552

படம் - ஙஈ27ஙஉஉப-

மதுரை மங்கையா்கரசி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாட்டில் பேசிய மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதா. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல் உள்ளிட்டோா்.

மதுரை, ஜன. 27 : பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மதுரை மாவட்ட பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு, மதுரை மங்கையா்கரசி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்துப் பேசினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா, மேலூா் மாவட்டக் கல்வி அலுவலா் முத்துலட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலா் சாயி சுப்புலட்சுமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பள்ளி மேலாண்மைக் குழு மாநிலக் கருத்தாளா்கள் த. ரத்தின விஜயன், மரியசூசை ஆகியோா் திட்ட விளக்கவுரையாற்றினா்.

சமூக சீரமைப்பில் சிறப்பாகப் பங்காற்றிய 59 பள்ளிகளின் மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.

பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், மேலாண்மைக் குழு தலைவா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்புப் பயிற்றுநா்கள், இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னாா்வலா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.

மதுரை தொடக்கக் கல்வித் துறை உதவித் திட்ட அலுவலா் பெ.சரவண முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com