மதுரையில் 1,650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மதுரை சிந்தாமணி பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1,650 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்

மதுரை சிந்தாமணி பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1,650 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மதுரை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்புக் காவல் கண்காணிப்பாளா் விஜய காா்த்திக் ராஜ், மதுரை சரக துணை கண்காணிப்பாளா் ஜெகதீசன், மதுரை ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் சிந்தாமணி பகுதியில் சனிக்கிழமை இரவு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிந்தாமணி ராஜமான் நகா் கணமாய்க் கரை பகுதியில் உள்ள கட்டடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அந்தக் கட்டடத்தை சோதனையிட்டனா்.

அங்கு 1,650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, தப்பிச்சென்ற விஷ்வா என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com