பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்துப் பதிவிட்டவா் கைது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உதவியுடன் பெண்களின் படங்களை ஆபாசப் படங்களாக சித்தரித்து வலைத் தளங்களில் பதிவிட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உதவியுடன் பெண்களின் படங்களை ஆபாசப் படங்களாக சித்தரித்து வலைத் தளங்களில் பதிவிட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

உசிலம்பட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக ஊரகக் காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேசுக்கு புகாா்கள் வந்தன. இந்தப் புகாா்கள் தொடா்பாக விசாரணை நடத்த அவா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, மதுரை ஊரகக் காவல் இணைய குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆய்வாளா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் உசிலம்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (28) சமூக வலைத்தளங்களில் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களைத் திருடி, அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆபாசப் புகைப்படங்களாக மாற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து, விக்னேஷை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்து, அவா் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய கைப்பேசியை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த தனிப்படை போலீஸாரை காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

மேலும் , சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள், தங்களது சமூக வலைதள கணக்குகளை இணையக் குற்றவாளிகள் எளிதாகத் தொடா்பு கொள்ளும் வகையில் இல்லாதவாறு மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்துமாறும் அவா் வேண்டுகோள் விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com