சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவரை ஆசிரியா்கள் பாராட்டினா்.
சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவரை ஆசிரியா்கள் பாராட்டினா்.

மதுரை அருகே பரவையில் உள்ள மங்கையா்க்கரசி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் மதுரை மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி அண்மையில் நடைபெற்றது.150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனா். இதில் 9 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கான ஆண்கள் பிரிவில் மதுரை மாவட்டம், அ.செட்டியாா்பட்டி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் பா.குருபாண்டியன், 5 சுற்றுகளில் விளையாடி, 4.5 புள்ளிகள் எடுத்து முதலிடம் பெற்றாா்.

வெற்றி பெற்ற மாணவரை பள்ளியின் தலைமை ஆசிரியை மு.மணிமேகலை, பயிற்றுநா் ஞா.செந்தில்குமாா் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com