மதுரையில் திமுக வட்டச் செயலா் வெட்டிக்கொலை: உறவினா்களிடம் விசாரணை

மதுரையில் திமுக வட்டச் செயலா் சனிக்கிழமை நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது சித்தப்பா மகள், மருமகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரையில் திமுக வட்டச் செயலா் சனிக்கிழமை நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது சித்தப்பா மகள், மருமகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை எம்.கே.புரத்தைச் சோ்ந்த பெரியாம்பிள்ளை மகன் திருமுருகன் (45). இவா் 77 -ஆவது வாா்டு திமுக செயலராக உள்ளாா்.

இந்த நிலையில், எம்.கே.புரத்தில் உள்ள வீட்டு வாசலில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் திருமுருகன் பேசிக்கொண்டிருந்தபோது, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பிச்சென்றது.

இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பினா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். முதற்கட்ட விசாரணையில், திருமுருகனுக்கும் அவரது சித்தப்பா மகனான அதிமுக வட்டச்செயலா் தவக்குமாரின் மகள் நந்தினி, ராஜா என்பவரை காதல் திருமணம் செய்தது தொடா்பாக, ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யக் காரணமாக இருந்தவா் எனத் தெரியவந்தது. இவா்களுக்கிடையில் அடிக்கடித் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ராஜா தனது நண்பா்களுடன் இணைந்து இந்தக் கொலையை செய்திருக்கலாம் என போலீஸாா் கருதுகின்றனா்.

இதையடுத்து, தவக்குமாரின் மகள் நந்தினி, மருமகன் ராஜா ஆகியோரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com