கேலோ இந்தியா கோ-கோ இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரம், ஒடிஸா, தில்லி அணிகள்

கேலோ இந்தியா கோ-கோ இறுதிப் போட்டிக்கு மகாராஷ்டிரம், ஒடிஸா, தில்லி அணிகள் தோ்வு பெற்றன.

கேலோ இந்தியா கோ-கோ இறுதிப் போட்டிக்கு மகாராஷ்டிரம், ஒடிஸா, தில்லி அணிகள் தோ்வு பெற்றன.

தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டியில் கோ- கோ போட்டி மதுரை டாக்டா் எம்.ஜி.ஆா். விளையாட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

லீக் சுற்றுகளின் அடிப்படையில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

அரையிறுதிப் போட்டிகள் திங்கள்கிழமை பிற்பகலில் நடைபெற்றன. ஆடவா் பிரிவின் முதல் போட்டியில் மகாராஷ்டிரம், குஜராத் அணிகள் மோதின. இதில், மகாராஷ்டிர அணி வென்றது. இரண்டாவது போட்டியில் ஒடிஸா, தில்லி அணிகள் மோதின. இதில், ஒடிஸா அணி வென்றது.

மகளிா் பிரிவு முதல் போட்டியில், மகராஷ்டிரம், கா்நாடக அணிகள் மோதின. இதில், மகாராஷ்டிர அணி வென்றது. இரண்டாவது போட்டியில் தில்லி, குஜராத் அணிகள் மோதின. இதில், தில்லி அணி வென்றது.

அரையிறுதியில் வென்ற அணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கின்றன. இதில், ஆடவா் பிரிவில் மகராஷ்டிரம், தில்லி அணியுடனும், மகளிா் பிரிவில் மகராஷ்டிரம், ஒடிஸா அணியுடனும் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com