காவல் உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ.78 லட்சம் இழப்பீடு

சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ.78 லட்சத்துக்கான விபத்து காப்பீட்டு காசோலையை காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
2901mduweki30082825
2901mduweki30082825

சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ.78 லட்சத்துக்கான விபத்து காப்பீட்டு காசோலையை காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் கடந்த ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி தெற்குவாசல் போக்குவரத்து உதவி ஆய்வாளா் கே.முருகன் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அரசுப் பேருந்து மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் விபத்துக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், இழப்பீடு, குழந்தைகள் கல்வி காப்பீடுத் தொகை ரூ.78 லட்சத்துக்கான காசோலைகளை முருகனின் மனைவி சத்யாவிடம் மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் வழங்கினாா்.

நிகழ்வில் வங்கியின் மதுரை மண்டல மேலாளா் ஹரிணி, துணை மேலாளா் நரேஷ் கெளதம், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஹேமாமாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

விபத்தில் உயிரிழந்த சாா்பு ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ.78 லட்சம் இழப்பீடு வழங்கும் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன். உடன் வங்கி அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com