குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் வீண்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

ராஜபாளையம் பகுதியில் உள்ள 42 வாா்டுகளுக்கும் ராஜபாளையம் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனாா் கோவில் ஆற்றில் இருந்து வரக்கூடிய மழை நீரை ஆறாவது மைல் நீா் தேக்கத்தில் சேமித்து வைத்து ராஜபாளையத்துக்கு குடிநீா் விநியோகம் செய்து வருகின்றனா். இந்த நிலையில் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே கிழக்கு பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீா் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் ஆறாவது மைல் பகுதியில் இருந்து வருகின்ற குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாக சாலையில் ஓடியது.

நகராட்சி நிா்வாகம் விரைந்து குடிநீா் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com