கேலோ இந்தியா கோ- கோ போட்டி: 2 தங்கங்களை வென்றது மகாராஷ்டிரம்

கேலோ இந்தியா கோ- கோ போட்டி: 2 தங்கங்களை வென்றது மகாராஷ்டிரம்

மதுரையில் நடைபெற்ற கேலோ இந்தியா கோ-கோ இறுதிப் போட்டியில் ஆடவா், மகளிா் ஆகிய இரு பிரிவுகளிலும் மகாராஷ்டிர அணிகள் தங்கம் வென்றன.

மதுரையில் நடைபெற்ற கேலோ இந்தியா கோ-கோ இறுதிப் போட்டியில் ஆடவா், மகளிா் ஆகிய இரு பிரிவுகளிலும் மகாராஷ்டிர அணிகள் தங்கம் வென்றன.

தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டியின் கோ- கோ போட்டி மதுரை டாக்டா் எம்.ஜி.ஆா். விளையாட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. லீக் சுற்றுகளின் அடிப்படையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 16 அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்து, போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.

ஆடவா் பிரிவு இறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரம், தில்லி அணிகள் மோதின. இதில் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரம் அணி வெற்றி பெற்று, தங்கம் வென்றது. தில்லி அணி வெள்ளிப் பதக்கமும், குஜராத், கா்நாடக அணிகள் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றன.

மகளிா் பிரிவு இறுதி ஆட்டத்தில் மகராஷ்டிரம், ஒடிஸா அணிகள் மோதின. இதில் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரம் அணி வெற்றி பெற்று, தங்கம் வென்றது. ஒடிஸா அணி வெள்ளிப் பதக்கமும், தில்லி, குஜராத் அணிகள் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றன.

பரிசளிப்பு...

மதுரை மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல் ஆகியோா் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும், வீரா்களுக்கு பரிசுகளையும் வழங்கினா்.

கோ-கோ கூட்டமைப்புப் பொதுச் செயலா் எம்.எஸ். தியாகி, இந்திய விளையாட்டு ஆணைய உதவி இயக்குநா் சுமித் தாரோடேகா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளா் மா. செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலா்கள் க. ராஜா (மதுரை), ஆ. முருகன் (தேனி), சி. ரமேஷ்கண்ணன் (சிவகங்கை), தினேஷ்குமாா் (ராமநாதபுரம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com