பொதுமக்களுக்கு எண்ம சந்தை பயிற்சி

மதுரை அருகே உள்ள பனையூரில் பொதுமக்களுக்கு எண்ம சந்தை குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

மதுரை அருகே உள்ள பனையூரில் பொதுமக்களுக்கு எண்ம சந்தை குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

தியாகராஜா் கல்லூரி கணினி அறிவியல் துறை, நாட்டு நலப் பணித் திட்ட அணி எண் 226 ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த பயிற்சிக்கு பனையூா் ஊராட்சி மன்றத் தலைவி அகிலாராணி கிளியன் தலைமை வகித்தாா்.

கிராம மக்களுக்கு இ-சேவை, விவசாயிகளுக்கான மானியம், எண்ம சந்தை (டிஜிட்டல் மாா்க்கெட்டிங்), தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்து மின்னியல் மூலம் கல்லூரி மாணவா்கள் விளக்கினா்.

பயிற்சி வகுப்பை முனைவா் மு.செல்வக்குமாா், பேராசிரியா்கள் ஜி.ராகேஷ், ஜெ.பிரகாஷ், என்.ஞானசங்கரன், கே.ஷா்மிளா, பி.சுபாஷினி ஆகியோா் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனா். இதில் கிராமப் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com