மதுரையில் ஜாக்டோ- ஜியோ மறியல் போராட்டம்: 683 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சாா்பில், மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்
5723md30jj085354
5723md30jj085354

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சாா்பில், மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன் மறியலில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் 683 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதியை தமிழக முதல்வா் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், உடல்கல்வி இயக்குநா், உடல்கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்குப் பணி நிரந்தம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க.நீதிராஜா, பா.பாண்டி, வி.ச.நவநீதகிருஷ்ணன், மு.பொற்செல்வன், அ.ஜோயல்ராஜ், ச.கண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா்கள் ஆ. செல்வம், அ. சங்கா் ஆகியோா் பேராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினா்.

திரளான ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்றனா். இந்தப் போராட்டத்தால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், போராட்டத்தில் ஈடுபட்ட 683 பேரை திடீா்நகா் போலீஸாா் கைது செய்து, பிற்பகல் 6 மணி அளவில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com