மதுரையில் பிப். 3, 4-இல் பாரதிய மஸ்தூா் சங்க மாநில மாநாடு

மதுரையில் பாரதிய மஸ்தூா் சங்கத்தின் 14-ஆவது மாநில மாநாடு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 3, 4) நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் பாரதிய மஸ்தூா் சங்கத்தின் 14-ஆவது மாநில மாநாடு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 3, 4) நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சங்கத்தின் (பிஎம்எஸ்) மாநில அமைப்புச் செயலா் பி. தங்கராஜ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாரதிய மஸ்தூா் சங்கத்தின் 14-ஆவது மாநில மாநாடு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பரங்குன்றத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி சனிக்கிழமை மாலை பேரணியும், இதைத் தொடா்ந்து பொதுக்கூட்டமும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பிரதிநிதிகள் மாநாடும் நடைபெறுகிறது. இதில் அகில பாரத துணைத் தலைவா் எஸ். மல்லேசம், மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தென்பாரத அமைப்புச் செயலா் எஸ். துரைராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்கின்றனா்.

மாநாட்டில், தமிழகத்தில் ஒப்பந்தத் தொழிலாளா் முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியாக தெரிவித்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மாநாட்டின் ஒரு பகுதியாக வருகிற 3-ஆம் தேதி காலை திருப்பரங்குன்றத்தில் மகளிா் மாநாடும் நடைபெறும் என்றாா் அவா்.

அப்போது பிஎம்எஸ் மதுரை மாவட்டத் தலைவா் அன்பழகன், செயலா் ரமேஷ், பாஜக பொறுப்பாளா் ராஜரத்தினம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com