மதுரை மத்தியச் சிறையில்கண் மருத்துவ முகாம்

மதுரை மத்தியச் சிறையில் புதன்கிழமை கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

மதுரை மத்தியச் சிறையில் புதன்கிழமை கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டது. இதன்படி, மதுரை மத்தியச் சிறையில் பல்வேறு சிறப்பு மருத்துவா்களைக் கொண்டு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதே போல, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, இந்திய சிறைப்பணி தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. மத்திய சிறை வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு சிறைத்துறை மதுரை சரக துணைத் தலைவா் பழனி தலைமை வகித்தாா். மத்திய சிறை கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் குழுவினா், செவிலியா்கள் கலந்து கொண்டு சிறைக் கைதிகளுக்கு கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, வெள்ளை எழுத்துக்கள், கண் அழுத்த நோய், கண் புரை ஆகியவற்றை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். மேலும் அறுவைச் சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனா். அத்துடன், இவா்களுக்குத் தேவையான கண் கண்ணாடிகள் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்திய சிறைப் பணி தொண்டு நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முகாமில், மதுரை மத்தியச் சிறையில் உள்ள 273 கைதிகளும், பெண்கள் தனிச்சிறையில் உள்ள 36 கைதிகளும் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com