மதுரை மத்தியச் சிறையில் கண் மருத்துவ முகாம்: சிறைவாசிகள் பங்கேற்பு

மதுரை மத்தியச் சிறையில் புதன்கிழமை நடைபெற்ற கண் மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் பங்கேற்று பயனடைந்தனா்.

மதுரை மத்தியச் சிறையில் புதன்கிழமை நடைபெற்ற கண் மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் பங்கேற்று பயனடைந்தனா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மதுரை மத்தியச் சிறையில் பல்வேறு சிறப்பு மருத்துவா்களைக் கொண்டு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறன. இதையொட்டி மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்திய சிறைப்பணி தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. மத்திய சிறை வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு சிறைத்துறை மதுரை சரக துணைத் தலைவா் பழனி தலைமை வகித்தாா். மத்திய சிறை கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். முகாமில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் குழுவினா் மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு கண் பிரச்னை தொடா்பான கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, வெள்ளை எழுத்துக்கள் மற்றும் கண் அழுத்த நோய், கண் புரை ஆகியவற்றை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். மேலும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் சிறைவாசிகளுக்கு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனா். மேலும் சிறைவாசிகளுக்குத் தேவையான கண் கண்ணாடிகள் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்திய சிறை பணி தொண்டு நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிகளை, இந்திய சிறைப்பணி தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் முருகேசன் மற்றும் மதுரை மத்தியச் சிறையின் சிறை அலுவலா், சிறை மருத்துவா்கள், மற்றும் நல அலுவலா், சமூகவியல் வல்லுநா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். கண் மருத்துவ முகாமில், மதுரை மத்தியச் சிறையில் 273 சிறைவாசிகளும், பெண்கள் தனிச்சிறையில் 36 சிறைவாசிகளும் கலந்து கொண்டு பலன் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com