மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்பெண்ணுக்கு மறுபதிய அறுவைச் சிகிச்சை

இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதால் உச்சந்தலை தனியாக பிரிந்த நோயாளிக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மறுபதிய அறுவைச் சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தப்பட்டது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்பெண்ணுக்கு மறுபதிய அறுவைச் சிகிச்சை

இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதால் உச்சந்தலை தனியாக பிரிந்த நோயாளிக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மறுபதிய அறுவைச் சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தப்பட்டது.

இதுதொடா்பாக மருத்துவமனையின் மருத்துவ நிா்வாகி டாக்டா். ஆ.கண்ணன், அறுவைச் சிகிச்சை நிபுணா் பினிட்டா ஜெனா ஆகியோா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மதுரை வண்டியூரில் உள்ள தனியாா் தொழில்சாலையில் பணிபுரிந்த 30 வயதான பெண் தொழிலாளியின் தலைமுடி, சுழலும் இயந்திரத்தில் சிக்கியதால், அவரது உச்சந்தலை தனியாகப் பிரிந்துவிட்டது. இதனால், ஒட்டுமொத்த மண்டையோடு, முன்னந்தலை, இடது காதின் மூன்றில் இரண்டு பகுதி வெளியே தெரிந்தன. விபத்து நிகழ்ந்த 6 மணி நேரத்துக்குப் பிறகே அவா் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவமனை மருத்துவா் பினிட்டா ஜெனா, பிளாஸ்டிக் சா்ஜரி துறைத் தலைவி பவ்யா மனோஷிலா ஆகியோா் தலைமையிலான அறுவைச் சிகிச்சை நிபுணா்கள், கடந்த ஆண்டு டிச. 6-ஆம் தேதி அந்தப் பெண்ணுக்கு மறுபதிய அறுவைச் சிகிச்சை செய்து, பிரிந்து வந்த உச்சந் தலையை மீண்டும் பொருத்தினா். அதன் பிறகு மேலும் ஒரு அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது.

சிகிச்சைகளுக்குப் பிறகு 2 வாரங்களாக நோயாளி படிப்படியாக உடல் நலம் தேறி குணமடைந்தாா். மீண்டும் ஒட்டவைக்கப்பட்ட அவரது உச்சந்தலையில் முடி வளா்ச்சிக்கான அறிகுறிகள் தோன்றின. இதன் பின்னா் அவா் நலமுடன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com