மேலூா் அருகேகிடாய் முட்டுப் போட்டி

மேலூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற கிடாய் முட்டுப் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட கிடாய்கள் பங்கேற்றன.
மருதூரில் புதன்கிழமை நடைபெற்ற கிடாய் முட்டுப் போட்டியில் மோதிக் கொண்ட கிடாய்கள்.
மருதூரில் புதன்கிழமை நடைபெற்ற கிடாய் முட்டுப் போட்டியில் மோதிக் கொண்ட கிடாய்கள்.

மேலூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற கிடாய் முட்டுப் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட கிடாய்கள் பங்கேற்றன.

திருவாதவூா் அருகேயுள்ள மருதூரில் அய்யாநாச்சியம்மன் கோயில் தை மாத உற்சவத்தையொட்டி நடைபெற்ற இந்தப் போட்டியில் சிவகங்கை, விருதுநகா், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து கிடாய்கள் பங்கேற்றன. இதில் வெற்றிபெற்ற கிடாய்களின் உரிமையாளா்களுக்கு தங்கக்காசு, பரிசுக் கோப்பைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. போட்டியில் சிறப்பாக விளையாடிய கிடாய்க்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

முன்னதாக போட்டிகளை மேலூா் வருவாய் கோட்டாட்சியா் ஜெயந்தி தொடங்கிவைத்தாா். மேலூா் வட்டாட்சியா் செந்தாமரை முன்னிலை வகித்தாா். மேலூா், ஒத்தக்கடை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com