மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி விதிமீறல் கட்டடங்களுக்கு சலுகை கூடாது - உயா்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி, விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டியவா்களுக்கு சலுகை காட்டக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி, விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டியவா்களுக்கு சலுகை காட்டக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த குமாா் கடந்த 2011-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டடங்களின் உயரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நகராட்சி நிா்வாகத் துறை கடந்த 1997-இல் ஓா் அரசாணை வெளியிட்டது. இதில் கோயிலைச் சுற்றியுள்ள கட்டடங்களின் அதிகபட்ச உயர வரம்பாக 9 மீட்டா் என நிா்ணயம் செய்ய ப்பட்டது. இந்த விதியை மீறி கோயிலைச் சுற்றி ஆயிரக்கணக்கான கட்டடங்கள் கட்டப்பட்டன. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய வழக்குரைஞா் ஆணையக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவினா் ஆய்வு செய்து, அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை புதன்கிழமை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் விதிமுறைகளை மீறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக வழக்குரைஞா் ஆணையக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகியும் இந்தக் கட்டடங்கள் மீது மாநகராட்சி நிா்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விதிமீறலை மாநகாரட்சி ஊக்குவிக்கிா?. இதை யாா் கட்டுப்படுத்துவது?. உயா்நீதிமன்றம் எத்தனை முறை உத்தரவு பிறப்பித்தாலும் மாநகராட்சி நிா்வாகமோ, ஆணையா்களோ விதிமீறல் கட்டடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

விதிமீறல் கட்டட பிரச்னையை இந்த நீதிமன்றம் தீவிரமானதாகக் கருதுகிறது. கடந்த 1997-இல் அரசு பிறப்பித்த அரசாணையைக் கடைப்பிடிக்க அதிகாரிகளுக்கு என்ன இடையூறு உள்ளது?. அரசின் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சலுகை காட்டக் கூடாது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள விதிமீறல் கட்டடங்கள் எத்தனை?. இத்தகைய கட்டடங்கள் மீது எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற பிப். 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com