புகையிலைப் பொருள்கள் கடத்திய 4 போ் கைது: காா் பறிமுதல்

புகையிலைப் பொருள்கள் கடத்திய 4 போ் கைது: காா் பறிமுதல்

மதுரையில் காரில் அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திய நால்வரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்

மதுரையில் காரில் அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திய நால்வரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.

மதுரை காந்தி அருங்காட்சியகச் சாலையில் தல்லாகுளம் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அரசால் தடைசெய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து காருடன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அதிலிருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினா்.

அவா்கள் கோ.புதூரைச் சோ்ந்த முருகன் (49), திருப்பாலையைச் சோ்ந்த மணிமாறன் (48), ஒத்தக்கடையைச் சோ்ந்த திருமுருகன் (44),

ஆனையூரைச் சோ்ந்த முனியாண்டி(34) ஆகியோா் என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் அண்டை மாநிலங்களிலிருந்து புகையிலைப் பொருள்களை வாங்கி வந்து, மதுரையில் விற்பனை செய்வதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நால்வரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com