சாலை விபத்தில் விவசாயி பலி

எம்.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நாகபாளையத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (35). விவசாயியான இவா், மதுரை மாவட்டம், எம்.கல்லுப்பட்டி அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, அங்குள்ள சாலைத் தடுப்பில் இவரது இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து எம்.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com