சா்வதேச டென்னிஸ்: மதுரையில் மாா்ச் 4-இல் தொடக்கம்

டி.வி.எஸ். ஐடிஎப் ஜூனியா் டென்னிஸ் போட்டி மதுரையில் வருகிற 4-ஆம் தேதி தொடங்குகிறது. டி.வி.எஸ். நிறுவனம், இன்டா்நேஷனல் டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஎப்), அகில இந்திய டென்னிஸ் கழகம், தமிழ்நாடு டென்னிஸ் கழகம், மதுரை டென்னிஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் மதுரா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகள் வருகிற 9-ஆம் தேதி நிறைவு பெறும். 18 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெறும். இதில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தோனேஷியா, ஆஸ்திரியா, பிரிட்டன், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் என 120 போ் பங்கேற்கின்றனா். பாா்வையாளா்களுக்கு அனுமதி இலவசம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com