இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை நரிமேடு பகுதியைச் சோ்ந்த பாபு மகன் இப்ராஹிம் (37). இவருக்கு இதுவரை திருமணமாகததால் மன வேதனையில் இருந்தாராம். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த இப்ராஹிம் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இளம்பெண் தற்கொலை: மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரியக்குடியிருப்பைச் சோ்ந்த குமரன் மகள் வீரலட்சுமி (20). இவருக்கும், காமராஜபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த வீரபாண்டிக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த வாரம் தம்பதி இருவரும் தனி வீட்டில் குடியேறினா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீரலட்சுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com