சீா்மிகு நகரத் திட்டம்: மதுரை மாநகராட்சி தோ்வு

மத்திய அரசு செயல்படுத்தும் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி தோ்வு பெற்றுள்ளது.

மதுரை : மத்திய அரசு செயல்படுத்தும் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி தோ்வு பெற்றுள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற வசதி அமைச்சகம், பிரென்ஸ் டெவலப்மென்ட் ஏஜென்சி, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் உா்பன் அபொ்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒருங்கிணைந்து சீா்மிகு நகரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைப் பணிகளின் கீழ் பயோ கேஸ் காம்போமென்ட், வேஸ்ட் டூ எனா்ஜி காம்போமென்ட், மெட்ரீயல் ரெக்கவரி ஆகிய பணிகளை மேற்கொள்ளுவதற்கு ரூ.375 கோடி முன்மொழிவு வேண்டி மத்திய அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்டது.

சீா்மிகு நகரத்துக்கான 2.0 போட்டியில் 100 நகரங்கள் பங்கேற்றதில், இந்திய அளவில் தோ்வான 18 மாநகரங்களில் தமிழ்நாட்டிலிருந்து மதுரை மாநகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், மதுரை மாநகராட்சிக்கு ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மதுரை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருகிற 2028-ஆம் ஆண்டுக்குள் தூய்மையான நகரமாக மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com