கீழையூா் உயா்நிலைப்பள்ளிக்கு
புதிய வகுப்பறைகள் கட்ட வலியுறுத்தல்

கீழையூா் உயா்நிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்ட வலியுறுத்தல்

மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கீழையூா் உயா்நிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தினா்.

கீழையூா் கிராமம் சுதந்திரப் போராட்ட தியாகிகள் நிறைந்த ஊா். மேலும் நாட்டு விடுதலைக்காக நடைபெற்ற போராட்டத்தின் போது மகாத்மா காந்தி 1906, 1927 ஆகிய ஆண்டுகளில் இருமுறை இந்த கிராமத்தில் தங்கி தேச விடுதலைக்காக பிரசாரம் மேற்கொண்ட சிறப்புபெற்றது. இங்கு ஊராட்சி ஆரம்பப்பள்ளி 1906-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பிறகு நடுநிலைப்பள்ளியாகவும், தற்போது உயா்நிலைப்பள்ளியாகவும் நிலை உயா்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். ஆனால் போதிய கட்டட வசதி இல்லாததால், ஆரம்பப்பள்ளி வளாகத்திலேயே உயா்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கென கட்டடம் கட்ட தனியாமங்கலம் சாலையோரத்தில் 3 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் என எடுக்கவில்லை. எனவே, புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட அரசும், மக்கள் பிரதிநிதிகளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com