தோ்தல் பணி அலுவலா்களுக்கு பயிற்சி

மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசுத் துறை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலையொட்டிய சோதனைகளில் ஈடுபடவுள்ள காவல் துறையினா், வருவாய்த் துறையினா், விடியோ பதிவு குழுவினருக்கு தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கும் வகையில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்து, பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், தோ்தல் பிரிவு நோ்முக உதவியாளா் க. கண்ணன், தோ்தல் பிரிவு அலுவலா்கள், காவல் துறையினா் கலந்து கொண்டனா். தோ்தல் பறக்கும் படை குழுவினா், நிலை கண்காணிப்புக் குழுவினா், விடியோ பதிவுக் குழுவினா் பணியின் போது பின்பற்ற வேண்டிய தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள், பொருள்களை பறிமுதல் செய்யும் முன்பாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com