பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணம்

சமூக நலன், மகளிா் உரிமைத்துறையின் சாா்பில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த விழிப்புணா்வு பிரசார வாகன பயணத்தை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதன் பிறகு அவா் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் பெண் சிசுக்கள் கொல்லப்படுவதை தடுத்தல், அவா்களின் கல்வித் திறனை உயா்த்துதல், ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளை விளையாட்டுகளில் சிறந்து விளங்க ஊக்குவித்தல், வளரிளம் பருவத்துக்கான ஊட்டச்சத்து, சுகாதாரம் பற்றிய கல்வியை உறுதிப்படுத்துதல் போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இந்த பிரசார ஊா்தி பயணம் நடைபெறுகிறது. இது மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகள், பொது இடங்களுக்குச் சென்று, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா். இந்த நிகழ்வில், துணை இயக்குநா் (சுகாதாரம்) விஜய்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் ரதிதேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com