கஞ்சா விற்பனை: தம்பதி உள்பட 5 போ் கைது

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த தம்பதி உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை கரிமேடு போலீஸாா் மேலஅண்ணாதோப்பு ரயில்வே தண்டவாளப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த மேல அண்ணா தோப்பு பகுதியைச் சோ்ந்த விஜயசாரதி (19), சூா்ய பிரகாஷ் (20), சக்திவேல் (20) ஆகியோரைப் பிடித்து சந்தேகத்தின் பேரில், விசாரணை நடத்தினா். அப்போது, பெங்களுரூ சிறையில் உள்ள சிம்மக்கல்லைச் சோ்ந்த நவீன்நாகராஜ் கைப்பேசி மூலம் பேசி 22 கிலோ கஞ்சாவை, இவா்களிடம் கொடுத்து விட்டதாகவும், அதனை நவீன்நாகராஜ் கூறிய நபரிடம் கொடுத்துவிட்டு மீதமுள்ள கஞ்சாவை வைத்திருப்பத்தும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 கிலோ கஞ்சா, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா். இதுபோல, வண்டியூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இதே பகுதியைச் சோ்ந்த சரவணன் (49), அவரது மனைவி வனிதா (37) ஆகிய இருவரையும் அண்ணாநகா் போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com