நீா் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்ட நீா் நிலை ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலூா் வலைச்சேரிப்பட்டியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் எஸ்.பி. சரவணன், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனு : மதுரை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை, நீா் வளத் துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் சாா்பில் பராமரிக்கப்படும் நீா் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியபட்டு, அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், ஆக்கிமிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய பரிசீலினை மேற்கொண்டு, அனைத்து நீா் நிலை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்கள் வழங்கிய தீா்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, நீா் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com