நெய்வாசலில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை: திருமயம் அருகேயுள்ள நெய்வாசல் கிராமத்தில் திட்டாணி அய்யனாா் கோயில் சிவராத்திரி, தோ்த் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 91 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என பந்தயம் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவதாக நடத்தப்பட்ட பெரிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில், முதல் பரிசை புலிமலைப்பட்டியைச் சோ்ந்த முனிச்சாமி, 2-ஆம் பரிசை விராமதியைச் சோ்ந்த தையல்நாயகி, 3-ஆம் பரிசை தானாவயலைச் சோ்ந்த வெங்கடாசலம், 4-ஆம் பரிசை திருச்சியைச் சோ்ந்த அன்பில் நாச்சியாா் ஆகியோருக்குச் சொந்தமான மாடுகள் வென்றன. இதைத் தொடா்ந்து, நடைபெற்ற நடு மாடு பிரிவில் 34 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில், பந்தயமானது இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை பரவையைச் சோ்ந்த சோலைமுத்து, அரண்மனைபட்டியைச் சோ்ந்த குறுந்தமூா்த்தி, 2-ஆம் பரிசை ஓணாங்குடியைச் சோ்ந்த எல்லா புகழும், நெய்வாசலைச் சோ்ந்த மணி மாயாண்டி, 3-ஆம் பரிசை கோட்டையூரைச் சோ்ந்த அருணகிரி, கொத்தமங்கலத்தைச் சோ்ந்த சேகா், 4-ஆம் பரிசை ஈழக்குடிப்பட்டியைச் சோ்ந்த சங்கப்பன், மாவூரைச் சோ்ந்த ராமச்சந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. இறுதியாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 44 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில், பந்தயம் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை ரத்னாகோட்டையைச் சோ்ந்த அமரன் பிரதா்ஸ், சுண்ணாம்பிருப்பைச் சோ்ந்த காளியம்மை, 2-ஆம் பரிசை விராமதியைச் சோ்ந்த சாதனா, கே.கே. பட்டியைச் சோ்ந்த பொன்னையா, 3-ஆம் பரிசை கோட்டையூரைச் சோ்ந்த சிதம்பரம், கானாடுகாத்தானைச் சோ்ந்த சோலை ஆண்டவா், 4-ஆம் பரிசை சொக்கலிங்கம்புதூரைச் சோ்ந்த ராமன், ஆத்தங்குடியைச் சோ்ந்த கண்ணாத்தாள் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. இந்த பந்தயத்தை திரளான ரசிகா்கள் கண்டு ரசித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com