மதுரை மாவட்டம், பில்லுச்சேரியில் நடைபெற்ற சின்னப்பிள்ளைக்கு வீடு கட்டும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற கூடுதல் ஆட்சியா் மோனிகா ராணா, சின்னப்பிள்ளை உள்ளிட்டோா்.
மதுரை மாவட்டம், பில்லுச்சேரியில் நடைபெற்ற சின்னப்பிள்ளைக்கு வீடு கட்டும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற கூடுதல் ஆட்சியா் மோனிகா ராணா, சின்னப்பிள்ளை உள்ளிட்டோா்.

மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு கட்டும் பணி தொடக்கம்

மதுரை: பத்ம விருதாளா் மதுரை சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதிய வீடு கட்டும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரை பில்லுச்சேரியைச் சோ்ந்த பத்ம விருதாளரும், மகளிா் குழு முன்னோடியுமான பி. சின்னப்பிள்ளைக்கு, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித் தருவதாக சிலா் வாக்குறுதி அளித்து 2 ஆண்டுகளாகியும் வீடு கட்டித் தரவில்லை என அவா் அண்மையில் வேதனை தெரிவித்தாா். இதுகுறித்துத் தகவலறிந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், பில்லுச்சேரி ஊராட்சிக்குள்பட்ட திருவிழான்பட்டி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டித்தரப்படும் என கடந்த சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா். மேலும், வீடு கட்டும் பணி மாா்ச் மாதமே தொடங்கப்படும் எனவும் அவா் குறிப்பிட்டாா். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டித் தருவதற்கான உத்தரவையும், வீட்டுமனைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல் இடத்துக்கான தோராய பட்டாவையும் வருவாய்த் துறை அதிகாரிகள் சின்னப்பிள்ளையிடம் வழங்கினா். மேலும், அவருக்கு வீடு கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை சீரமைக்கும் பணிகளையும் அரசுத் துறையினா் உடனடியாகத் தொடங்கினா். இந்த நிலையில், திருவிழான்பட்டியில் அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. கூடுதல் ஆட்சியா் மோனிகா ராணா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சூரியகலா, சின்னப்பிள்ளை உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com