மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

சிவகங்கை: சிவகங்கை அருகே இடையமேலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி, சீா்வரிசை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) மாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலா் இந்திராணி, தலைமை ஆசிரியா் லட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவா் சிவதாஸ், கிராம அம்பலகாரா்கள் தங்கராசு, முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வில் புதிதாக 17 மாணவா்கள் சோ்க்கப்பட்டனா். இதில் சீா்வரிசையாக 2 பீரோ, 4 தொலைக்காட்சிகள், அச்சு நகல் எடுக்கும் இயந்திரம், கணினி, வெள்ளைப் பலகை, 24 நாற்காலிகள், பானை, வாளி, நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்களை பள்ளிக்கு பெற்றோா்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், கிராம மக்கள் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com