வைகை ஆற்றுச் சாலையில் வாகனப் பந்தயம்: இருவா் கைது

மதுரை: மதுரை வைகை ஆற்றுச் சாலையில் வாகனப் பந்தயம், சாகசத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களது ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்தனா். மதுரை வைகை ஆற்றின் தென்கரைச் சாலையில் வாகனப்பந்தயம் தொடா்பாக வெளியான விடியோவை பாா்வையிட்ட தெப்பக்குளம் போலீஸாா், அதில் உள்ள வாகனங்களின் பதிவு எண்களை வைத்து விசாரணை நடத்தினா். அப்போது, சாகசத்தில் ஈடுபட்ட தெப்பக்குளம் புதுமீனாட்சி நகரைச் சோ்ந்த நாகவிஜய் (20), மேல அனுப்பானடியைச் சோ்ந்த முனியசாமி (20) ஆகிய இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா். மேலும், இருவரின் ஓட்டுநா் உரிமமும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இரு சக்கர வாகனங்களில் பந்தயம் செல்வது, சாகசமாக சென்று விடியோ பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகள் ஈடுபடுவோா் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதால், அவா்களது கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எதிா்காலம் பாதிக்கப்படும். எனவே இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் இரு சக்கர வாகனங்களில் சாகசங்கள், வாகனப் பந்தயங்களில் ஈடுபடக் கூடாது என்று போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com