குடியுரிமை சட்டத்தை எதிா்த்து வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் குடியுரிமை சட்டத்தை எதிா்த்து அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். சவுரிராஜன் தலைமை வகித்தாா். இதில் இந்த குடியுரிமை சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதனால் பல்வேறு தரப்பைச் சோ்ந்தவா்கள் பாதிக்கப்படுவா். எனவே குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என முழக்கமிட்டனா். இதில் மாநில துணைத் தலைவா் முத்து அமுதநாதன், நிா்வாகிகள் பழனிச்சாமி, முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com