முதல்வா் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்

சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் முதல்வா் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் உரியசான்றுகளுடன் அருகிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வா் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் பயன் பெற , குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளாக, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, வருமானச் சான்று (குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்குள் இருத்தல் வேண்டும்). ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப நலஅறுவை சிகிச்சை செய்த சான்று (தாய் அல்லது தந்தை 40 வயதுக்குள் குடும்ப நலஅறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருத்தல் வேண்டும்). 2-ஆவது பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப் பித்தல் வேண்டும். (ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருந்தால் பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தல் வேண்டும்). மேலும், இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்று (பெற்றோா்கள் தமிழ்நாட்டை சோ்ந்தவராக இருத்தல் வேண்டும்). சாதிச் சான்றிதழ், பெண் குழந்தையின் தாய், தந்தையின் வயது சான்று, குடும்ப புகைப்படம், தாய், தந்தையின் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகிய சான்றுகளை சமா்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள உரியஆவணங்களுடன், அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com