விடுதலைச் சிறுத்தைகள்  
கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய பாஜக அரசை கண்டித்து, சிவங்கங்கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசல் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலா் பாலையா தலைமை வகித்தாா். மண்டலத் துணைச் செயலா் முத்துரராசு, நிா்வாகிகள் பாஸ்கரன், சுடா்மணி, தமிழேந்தி, ஆதிவளவன், கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நில உரிமை மீட்பு இயக்க மாநிலச் செயலா் சசி, மாநிலத் துணைச் செயலா் சரவணன், ஒன்றியச் செயலா் (தெற்கு) ராமதாஸ் ராவணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில் தமுமுக மாவட்டச் செயலா் அப்துல்முத்தலிபு, திக மாவட்டச் செயலா் புகழேந்தி, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளா் வைகை சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com