துணை ஆணையா் மதுகுமாரி.
துணை ஆணையா் மதுகுமாரி.

மதுரை மாநகரக்காவல் துணை ஆணையா் பொறுப்பேற்பு

மதுரை மாநகர காவல் வடக்கு துணை ஆணையராக மதுக்குமாரி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இங்கு துணை ஆணையராக இருந்த பாலாஜி மாற்றப்பட்டு, புதிய துணை ஆணையராக மதுக்குமாரி நியமிக்கப்பட்டாா். பிகாா் மாநிலம், பாட்னாவைச் சோ்ந்த இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு இந்திய காவல்பணிக்கு தோ்வு செய்யப்பட்டாா். பெங்களூரில் உள்ள தேசிய ஆடை தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை பட்டபடிப்பும், டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டமும் பெற்றாா். முன்னதாக சேலம் மாவட்டத்தில் பயிற்சி உதவி கண்காணிப்பாளராகவும், தேனி மாவட்டத்தில் காவல் உதவிக் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்த மதுக்குமாரி, கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்று தற்போது துணை ஆணையராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com