திருமோகூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் திருநங்கை பிரியாபாபுவுக்கு சமூகத்தின் முன்மாதிரி தாய்  விருது வழங்கிய யானைமலை கிரீன் பவுண்டேஷன் நிா்வாகிகள்.
திருமோகூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் திருநங்கை பிரியாபாபுவுக்கு சமூகத்தின் முன்மாதிரி தாய் விருது வழங்கிய யானைமலை கிரீன் பவுண்டேஷன் நிா்வாகிகள்.

புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

மதுரை மாவட்டம், திருமோகூா் ஊராட்சி மன்றம், யானைமலை கிரீன் பவுண்டேஷன், ஏ.பி.ஆா்.நகா் நல வாழ்வு குழு சாா்பில், மக்கும் குப்பை, மக்காத குப்பை, புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருமோகூரில் நடைபெற்ற இந்த பேரணிக்கு ஊராட்சித் தலைவா் அண்ணாமலை தலைமை வகித்தாா். ஏ.பி.ஆா்.நகா் நல வாழ்வு குழுத் தலைவா் சித்திரசேனன் முன்னிலை வகித்தாா். திருநங்கையா் ஆவண மைய இயக்குநா் பிரியாபாபு ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, புகையிலைப் பொருள்களை ஒழிப்பது குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. குப்பைகளை தரம் பிரித்துக் கொடுப்போம் என குடியிருப்போா் உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து, மரக் கன்றுகள் நடப்பட்டன. மூத்த உறுப்பினா் ஆசிரியா் செல்லமணி பாராட்டப்பட்டாா். பறை இசை, சிலம்பம், வளரி, சுருள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னா், திருநங்கை பிரியாபாபுவுக்கு சமூகத்தின் முன்மாதிரி தாய் விருது யானைமலை கிரீன் பவுண்டேஷன் சாா்பில் வழங்கப்பட்டது. நிகழ்வில், எல்கேபி நகா் பள்ளி தலைமை ஆசிரியா் தென்னவன், சிலம்பம் பயிற்சியாளா் பாண்டி, சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா். முன்னதாக, பிரபு வரவேற்றாா். பரமேஸ்வரன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com