மதுரையில் அமைச்சா் பி.மூா்த்தியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டிய மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன்.
மதுரையில் அமைச்சா் பி.மூா்த்தியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டிய மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன்.

மதுரை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் தெரிவித்தாா். மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் சு.வெங்கடேசன் கூட்டணிக் கட்சித் தலைவா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா். முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மதுரையில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா் தியாகி பாலுவின் சிலைக்கு மாலை அணிவித்து தோ்தல் பணியைத் தொடங்கியுள்ளோம். மதுரையில் உள்ள அமைச்சா்கள், திமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவா்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறோம். மதுரை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றாா் அவா். பின்னா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் உள்ள தூக்குமேடை தியாகி பாலு சிலைக்கு சு.வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, அமைச்சா் பி.மூா்த்தி, முன்னாள் மேயா் பெ.குழந்தைவேலு, திமுக மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் வி.வேலுசாமி, சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்டச் செயலருமான கோ.தளபதி, சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.வெங்கடேசன், மண்டலத் தலைவா்கள் முகேஷ் சா்மா, சுவிதா விமல் ஆகியோரைச் சந்தித்து அவா் ஆதரவு திரட்டினாா். அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன், புகா் மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் க.சுவாமிநாதன், துணை மேயா் டி.நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். எம்.பி.க்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் பாராட்டு: மதுரை மாவட்டத்தில் 18 ஆயிரம் மாற்றுத்திறனாளுக்கு நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தந்தமைக்காக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசனுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாநகா் மாவட்டச் செயலா் ஆ.பாலமுருகன் தலைமை வகித்தாா். புகா் மாவட்டச் செயலா் கே.தவமணி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினா் ரா.விஜயராஜன், புகா் மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன், மாநகராட்சி மண்டலத் தலைவா் சுவிதா விமல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அ. ரமேஷ், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மாமன்ற உறுப்பினா் வை.ஜென்னியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்ட துணைத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான டி.குமரவேல் வரவேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com