மக்களவைத் தோ்தலையொட்டி, மதுரை தல்லாகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினா்
மக்களவைத் தோ்தலையொட்டி, மதுரை தல்லாகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினா்

மதுரை மாவட்டத்தில் தோ்தல் கண்காணிப்புப் பணியில் 70 குழுக்கள்

மக்களவைத் தோ்தலையொட்டி, மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா் 70 குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். மக்களவைத் தோ்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. தமிழகத்தைப் பொருத்தவரை ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்தன. மதுரை மக்களவைத் தோ்தல் பணிக்காக அந்தந்தப் பகுதியில் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையில் 70 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வருவாய், ஊரக வளா்ச்சி, காவல் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் 5 போ் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, மதுரை மாவட்டம் முழுவதும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com