மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த சா்க்கரை ஆலைத் தொழிலாளா்கள்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த சா்க்கரை ஆலைத் தொழிலாளா்கள்.

அலங்காநல்லூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வலியுறுத்தி ஆலைத் தொழிலாளா்கள், மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் மனு அளித்தனா். அவா்கள் அளித்த மனு விவரம் : தென் மாவட்டங்களில் சுமாா் 137 ஏக்கா் பரப்பளவில் உள்ள ஒரே கூட்டுறவு சா்க்கரை ஆலை அலங்காநல்லூா் மேட்டுப்பட்டியில் உள்ள சா்க்கரை ஆலை. தற்போது செயல்படாமல் உள்ள இந்த ஆலையில் பணியாற்றிய தொழிலாளா்களுக்கு கடந்த 22 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதுதவிர, கரோனா கால நிவாரணத் தொகை, ஊதிய உயா்வும் இதுவரை வழங்கவில்லை. எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஆலையை மீண்டும் இயக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com